by Staff Writer 20-10-2020 | 2:16 PM
Colombo (News 1st) மேலும் பல பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளுக்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் தடை விதிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
சுற்றாடல் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தடை விதிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 20 மில்லிமீற்றர் மற்றும் 20 கிராமுக்கும் குறைவான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தி பயன்பாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தடை உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு செல்லுபடியாகாதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கு மாற்றீடாக 100 மில்லிமீற்றர் மற்றும் 100 கிராமுக்கும் அதிக நிறையுடைய பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.