விழாக்கள், பொது கூட்டங்களில் கலந்துகொள்வதை தவிர்க்குமாறு வேண்டுகோள்

விழாக்கள், பொது கூட்டங்களில் கலந்துகொள்வதை தவிர்க்குமாறு வேண்டுகோள்

விழாக்கள், பொது கூட்டங்களில் கலந்துகொள்வதை தவிர்க்குமாறு வேண்டுகோள்

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2020 | 1:51 pm

Colombo (News 1st) விழாக்கள் மற்றும் பொது கூட்டங்களில் பங்கேற்க வேண்டாமென இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளான 87 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விசேடமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள மினுவாங்கொடை, கம்பஹா, கட்டுநாயக்க மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பகுதிகளிலேயே இவர்கள் அடையாளம் காணப்பட்டனர். குளியாப்பிட்டிய பகுதியில் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டவர்களில் சிலருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனூடாக, இந்நாட்களில் மினுவாங்கொடை கொத்தணியோடு தொடர்புடையவர்களுக்கு மேலதிகமாக ஏனைய தொடர்பாளர்கள் அடையாளம் காணப்படுவது, வெவ்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற திருமண மற்றும் இதர நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்களே என்பது புலப்படுகின்றது. ஆகவே, இயலுமானவரை பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு கோரப்படுகின்றது

என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்