பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து சூடான் நீக்கம்

பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து சூடான் நீக்கம்

பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து சூடான் நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2020 | 9:20 am

Colombo (News 1st) பயங்கரவாதத்திற்கு அரச ஆதரவு வழங்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து சூடானை நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சூடானின் புதிய அரசாங்கம், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க இணங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் கீழ், சூடான் பாரிய முன்னேற்றமடைமந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சூடானால் அமெரிக்காவுக்கு செலுத்தப்படவிருந்த 335 மில்லியன் ரூபா நட்டத்தொகை தற்போது செலுத்தப்பட்டுள்ளதாக சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்டொக் (Abdalla Hamdok) தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்