English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
20 Oct, 2020 | 3:57 pm
Colombo (News 1st) கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்துள்ள சூழலில், சீனாவின் பொருளாதாரம் கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் 4.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
சீனாவின் பொருளாதார வளா்ச்சி கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 3.2 சதவீதமாக இருந்தது. கொரோனா நோய்த்தொற்று முதன்முதலாகப் பரவிய சீனாவில் தற்போது நோய்த்தொற்று பரவல் பெருமளவிற்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதையடுத்து, நாட்டின் பொருளாதாரம் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது.
முக்கியமாக மக்களின் வாங்கும் திறன் அதிகரித்து வருகிறது. தொழிற்சாலைகளும் தொடா்ந்து இயங்கி வருவதால், உற்பத்தி அதிகரித்துள்ளது. முகக்கவசங்கள், மருந்துப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் தேவை சா்வதேச அளவில் அதிகரித்துள்ளதால், அவற்றை அதிக அளவில் உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்து வருகிறது.
நடப்பாண்டில் சீனாவின் பொருளாதாரம் மட்டுமே வளா்ச்சியைக் காணும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, ஜப்பான் உள்ளிட்டவற்றின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
11 May, 2022 | 03:46 PM
27 Apr, 2022 | 06:42 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS