இருதரப்பு பேச்சுவார்த்தையில் மைக் பொம்பியோ

இருதரப்பு பேச்சுவார்த்தையில் மைக் பொம்பியோ கலந்துகொள்ளவிருப்பதாக அறிவிப்பு 

by Staff Writer 20-10-2020 | 11:31 AM
Colombo (News 1st) அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்தியாவுக்கான 2 நாட்கள் விஜயம் மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் அவர் இலங்கைக்கும் வருகை தரவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் வருகையை உறுதிப்படுத்துவதாக, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.