by Chandrasekaram Chandravadani 20-10-2020 | 9:16 AM
Colombo (News 1st) தென் அமெரிக்க நாடான அர்ஜென்டீனாவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்துள்ளது.
10 இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அர்ஜென்டீனா ஐந்தாமிடத்திலுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் 12,982 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மொத்தமாக நாட்டில் 1,002,662 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த காலப்பகுதியில் 451 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதோடு, மொத்தமாக 26,716 பேர் உயிரிழந்துள்ளனர்.