அக்கரைப்பற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மீட்பு

அக்கரைப்பற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மீட்பு

அக்கரைப்பற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மீட்பு

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2020 | 8:26 pm

Colombo (News 1st) அக்கரைப்பற்று – கண்ணகிபுரம் வயல் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்றை அக்கரைப்பற்று பொலிஸார் இன்று கண்டுபிடித்துள்ளனர்.

அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.

உரப்பை ஒன்றினுள் சுற்றி குழாய் ஒன்றிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக கண்ணகிபுரம் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்