மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 40 பேருக்கு கொரோனா

மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 40 பேருக்கு கொரோனா 

by Staff Writer 19-10-2020 | 7:25 PM
Colombo (News 1st) மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிக்கப்பட்ட 19 பேருக்கும் அவர்களுடன் தொடர்புகளை பேணிய 21 பேருக்கும் இன்று (19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் இன்று 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.