மறு அறிவித்தல் வரை பொதுமக்கள் சேவை தினம் இல்லை

மறு அறிவித்தல் வரை அரச நிறுவனங்களில் பொதுமக்கள் சேவை தினம் இடம்பெறாது

by Staff Writer 19-10-2020 | 5:31 PM
Colombo (News 1st) அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் அரச மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்லுமாறு சுகாதார அமைச்சினால் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கருத்திற் கொண்டு, பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டுமென சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். சமூகத்தில் பெரும்பாலானோர் அவர்களுக்கு தெரியாமலேயே வைரஸ் தொற்றுடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, இயலுமானவரை ஒன்றுகூடல்களை தவிர்க்குமாறு சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏதேனுமொரு இடத்திற்கு செல்லும் போது இயலுமானவரை சமூக இடைவௌியை பேணுமாறும் எந்நேரமும் முகக்கவசம் அணியுமாறும் அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, அரச நிறுவனங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் சேவைகளை மட்டுப்படுத்தி அதிகளவான பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு அரச ​சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. மீள அறிவிக்கப்படும் வரை அரச நிறுவனங்களில் பொதுமக்கள் சேவை தினம் இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.