'பஞ்சிகாவத்தை நெவில்'கைது

'பஞ்சிகாவத்தை நெவில்' கைது

by Staff Writer 19-10-2020 | 4:59 PM
Colombo (News 1st) 'பஞ்சிகாவத்தை நெவில்' என்றழைக்கப்படும் நெவில் தர்ஷன், பஞ்சிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து கைத்துப்பாக்கி ஒன்றும் 02 மெகசின்களும் 10 ரவைகளும் 02 கிலோகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சந்தேக நபரை 07 நாட்கள் தடுத்துவைத்து விசாரணைக்கு செய்வதற்கான உத்தரவிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.