by Staff Writer 19-10-2020 | 3:36 PM
Colombo (News 1st) கொரோனா நோயாளர்கள் அதிகரிப்பதன் காரணமாக பிரதேச வைத்தியசாலைகளையும் கொரோனா நோயாளர்களுக்கு பயன்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வைத்தியசாலைகளை கொரோனா நோயாளர்களுக்கு ஏற்றால் போல மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், தற்போது 19 பிரதேச வைத்தியசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், இந்த நிலை குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் எனவும்
பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.