பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கான கடன் திட்டம் 

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கான கடன் திட்டம் அறிமுகம்

by Staff Writer 19-10-2020 | 3:05 PM
Colombo (News 1st) COVID - 19 தொற்றினால் பாதிக்கப்பட்ட தொழில்துறையினரால் முன்வைக்கப்பட்ட 61,907 கடன் விண்ணப்பங்களுக்காக 178 பில்லியன் ரூபா கடன் தொகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதற்காக 45,582 பயனாளிகளுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. COVID - 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட சுயதொழில் மற்றும் தனிநபர் வர்த்தக செயற்பாடுகள் உள்ளிட்ட தொழிற்றுறைகளை சேர்ந்தவர்களுக்காக இந்த கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கிடைத்துள்ள விண்ணப்பங்களை ஆராய்ந்து 150 பில்லியனுக்கு உட்பட்ட கடனுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. அதற்கமைய, விண்ணப்பிக்கப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பதாரிகளுக்கு இந்த கடன் திட்டத்தின் கீழ் நிவாரணங்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் திட்டத்தின் முதலாவது கட்டம் 2020 ஏப்ரல் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களை ஜூலை முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் செயற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. 04 வீத வருட வட்டியின் கீழ் இந்த கடன் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.