வடக்கு சைப்பிரஸின் ஜனாதிபதியாக எர்சின் டேட்டர் தெரிவு

வடக்கு சைப்பிரஸின் ஜனாதிபதியாக எர்சின் டேட்டர் தெரிவு

வடக்கு சைப்பிரஸின் ஜனாதிபதியாக எர்சின் டேட்டர் தெரிவு

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2020 | 4:22 pm

Colombo (News 1st) வடக்கு சைப்பிரஸில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வலதுசாரி தேசியவாத வேட்பாளரான எர்சின் டேட்டர் (Ersin Tatar) வெற்றி பெற்றுள்ளார்.

துருக்கியின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த மத்திய தரைக்கடல் தீவில், 52 வீதமான வாக்குகளை பெற்ற அவர் எதிர்பாராத வெற்றியை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி சார்பு கொள்கையுடைய எர்சின் டேட்டர், வடக்கு சைப்பிரஸ் தீவை 2 மாநிலங்களாக பிரிப்பதனை இலக்காக கொண்டுள்ளார்.

இருப்பினும் அவரை எதிர்த்து போட்டியிட்டவரும் தற்போதைய தலைவருமான முஸ்தபா அகின்சி, கிறேக்கத்தின் ஒரு பகுதியாக குறித்த தீவை இணைக்க திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்