ரிஷாட் பதியுதீனுக்கு விளக்கமறியல் 

ரிஷாட் பதியுதீனுக்கு விளக்கமறியல் 

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2020 | 6:14 pm

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக தெரிவித்து பொது உடமைகள் சட்டத்தின் கீழ் ரிஷாட் பதியுதீன் இன்று (19) அதிகாலை கைது செய்யப்பட்டார்.

கடந்த பொது தேர்தலின் போது, இடம்பெயர்ந்துள்ள மக்களை புத்தளத்திலிருந்து மன்னாருக்கு அழைத்துச் செல்ல அரச போக்குவரத்தை பயன்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, தெஹிவளையிலுள்ள தனியார் தொடர்மாடி குடியிருப்பொன்றில் இன்று அதிகாலை ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்