தனது சுயசரிதை படத்திலிருந்து விலகுமாறு விஜய் சேதுபதியிடம் முரளிதரன் வேண்டுகோள் 

தனது சுயசரிதை படத்திலிருந்து விலகுமாறு விஜய் சேதுபதியிடம் முரளிதரன் வேண்டுகோள் 

தனது சுயசரிதை படத்திலிருந்து விலகுமாறு விஜய் சேதுபதியிடம் முரளிதரன் வேண்டுகோள் 

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2020 | 8:24 pm

Colombo (News 1st) 800 படத்தில் நடிப்பதிலிருந்து விலகுமாறு முத்தையா முரளிதரன், விஜய் சேதுபதியை கோரியுள்ளார்.

இது தொடர்பான அறிக்கையை அவர் விஜய் சேதுபதிக்கு அனுப்பியுள்ளார்.

முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்க திட்டமிடப்பட்ட 800 திரைப்படத்தில் முரளிதரனின் பாத்திரத்தை ஏற்று நடிக்க விஜய் சேதுபதி தயாராகியிருந்தார்.

எனினும், தமிழ் நாட்டில் எழுந்த சர்ச்சைகள் மற்றும் அரசியல் எதிர்ப்புகள் காரணமாக அந்த திரைப்படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு முத்தையா முரளிதரன் கோரியுள்ளார்.

தம்மால் ஒரு கலைஞனின் வளர்ச்சி தடைப்படக்கூடாது என்பதால் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாக முரளிதரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறை இத்தகைய தடைகள் ஏற்பட்டாலும் அதனால் தாம் ஒருபோதும் சோர்ந்துவிடவில்லை எனவும் அந்த சகலதையும் எதிர்கொண்டே இந்த நிலைக்கு உயர முடிந்தது எனவும் முரளிதரன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது வாழ்நாள் பயணம் எதிர்கால சந்ததியினருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் உத்வேகம் மற்றும் மன உறுதியை அளிக்கும் என எண்ணியே தனது சுயசரிதையை படமாக்க சம்மதித்ததாகவும் அதில் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, முத்தையா முரளிதனின் இந்த வேண்டுகோளுக்கு விஜய் சேதுபதி தனது உத்தியோகபூர்வ ட்விட்டரில் “நன்றி, வணக்கம்” என பதிலளித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்