14 வைத்தியர்கள் உள்ளிட்ட 53 பேர் தனிமைப்படுத்தலில்

குளியாபிட்டிய வைத்தியசாலையில் 53 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

by Staff Writer 18-10-2020 | 5:48 PM
Colombo (News 1st) குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 53 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டார். இதனையடுத்து, வைத்தியர்கள் 14 பேர் உள்ளிட்ட 53 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர், டொக்டர் பிரபாத் வேரவத்த தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான பெண் IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் வைத்தியசாலைக்கு வருகை தருமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.