புதிதாக 1117 வைத்தியர்கள் நியமனம் 

புதிதாக 1117 வைத்தியர்கள் நியமனம் 

புதிதாக 1117 வைத்தியர்கள் நியமனம் 

எழுத்தாளர் Staff Writer

18 Oct, 2020 | 2:45 pm

Colombo (News 1st) புதிதாக 1,117 வைத்தியர்களை சேவையில் இணைத்துக் கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

புதிய வைத்தியர்களுக்கான பெயர்ப் பட்டியல் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு நியமனம் வழங்கப்பட்டுள்ளவர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி தொடக்கம் கடமைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்