இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் சார்ஜன்ட் உள்ளிட்ட எழுவர் கைது 

இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் சார்ஜன்ட் உள்ளிட்ட எழுவர் கைது 

இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் சார்ஜன்ட் உள்ளிட்ட எழுவர் கைது 

எழுத்தாளர் Staff Writer

18 Oct, 2020 | 3:10 pm

Colombo (News 1st) பூகொட பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் சார்ஜன்ட் ஒருவர் உள்ளிட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் பணி நீக்கப்பட்டுள்ளனர்.

கான்ஸ்டபிள் ஒருவரும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பூகொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உயிரிழந்தமை குறித்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்