மொரட்டுவை மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு

மொரட்டுவை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு

by Staff Writer 17-10-2020 | 4:31 PM
Colombo (News 1st)  மொரட்டுவை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்றிரவு 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. எனினும், சொய்சாபுர குடியிருப்பு தொகுதிக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. எகொடஉயன மற்றும் மோதரை பகுதிகளுக்கு குறித்த காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்