வௌிநாடு செல்வோர் PCR பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

by Staff Writer 17-10-2020 | 3:33 PM
Colombo (News 1st) வௌிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் 72 மணித்தியாலங்களுக்கு முன்னதாக PCR பரிசோதனைகளை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நாளை (18) பிற்பகல் 6 மணி முதல் அமுலாகும் என விமான நிலையங்கள் மற்றும் விமான சேவை அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்படும் வைத்தியசாலைகளில் PCR பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என அதிகார சபை தெரிவித்துள்ளது.