கோடரியால் தாக்கி இருவர் கொலை: சந்தேகநபர் கைது

வவுனியாவில் கோடரியால் தாக்கி இருவர் கொலை: சந்தேகநபர் கைது

by Staff Writer 17-10-2020 | 3:51 PM
Colombo (News 1st)  வவுனியா - மாணிக்கர் வளவு பகுதியில் கோடரியால் தாக்கி இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு இலக்காகிய 42 வயதான மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். இந்த தாக்குதலில் 44 மற்றும் 42 வயதான இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு மதுபானம் அருந்திய நால்வரில் மூவர் இணைந்து நான்காமவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான நபர் அங்கிருந்து தப்பிச்சென்று, பின்னர் கோடரியுடன் வந்து தம்மை தாக்கியவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதல் நடத்திய நபர் இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 34 வயதான ஒருவரே கோடரியால் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தானர். சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்