COVID-19 தொற்றை குணப்படுத்த Remdesivir உதவும்

COVID-19 தொற்றை குணப்படுத்த Remdesivir மருந்து குறைந்தளவு உதவும் என கண்டறியப்பட்டுள்ளது

by Bella Dalima 16-10-2020 | 5:30 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றில் இருந்து குணமடைய Remdesivir மருந்து குறைந்தளவு உதவுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. Remdesivir மற்றும் Hydroxychloroquine உள்ளிட்ட நான்கு தடுப்பு மருந்துகளை ஆராய்ந்த உலக சுகாதார ஸ்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த சந்தர்ப்பத்தில் அவருக்கும் Remdesivir தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், Remdesivir தடுப்பு மருந்தின் பெறுபேறு தொடர்பில் மேலும் ஆராயப்பட வேண்டும் என அதன் உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.