by Bella Dalima 16-10-2020 | 5:17 PM
Colombo (News 1st) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் தினேஷ் கார்த்திக், துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தும் வகையில், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக தினேஷ் கார்த்திக் இருந்தார். அந்த அணியில் இங்கிலாந்து அணியின் மோர்கன் விளையாடி வருகிறார். இங்கிலாந்திற்கு உலகக் கிண்ணத்தைப் பெற்றுக்கொடுத்த அவருக்கு அனுபவம் அதிகமாக இருப்பதால் அவரைத் தலைவராக நியமிக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், தினேஷ் கார்த்திக் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்துவதற்காக தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
அவருக்குப் பதிலாக மோர்கன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
கொல்கத்தா இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றி பெற்றுள்ளது.