தெரிவுக்குழு தலைவர் பதவியிலிருந்து மிஸ்பா விலகல்

தெரிவுக்குழு தலைவர் பொறுப்பிலிருந்து மிஸ்பா வுல் ஹக் விலகல்

by Staff Writer 15-10-2020 | 1:11 PM
Colombo (News 1st) பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு தலைவர் பொறுப்பிலிருந்து மிஸ்பா வுல் ஹக் (Misbah-ul-Haq) விலகியுள்ளார். எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக தாம் தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக மிஸ்பா வுல் ஹக் அறிவித்துள்ளார் முன்னாள் தலைவரான மிஸ்பா வுல் ஹக் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார். பிரதான பயிற்றுநர் மற்றும் தெரிவுக்குழு தலைவர் உள்ளிட்ட இரு பதவிகளை வகிப்பதில் தான் சிக்கலை எதிர்நோக்குவதாக மிஸ்பா வுல் ஹக் கூறியுள்ளார். இதன்காரணமாக தெரிவுக்குழு தலைவர் பொறுப்பிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி புதிய தெரிவுக்குழு தலைவர் பெயரிடப்படவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், புதிய தெரிவுக்குழு தலைவர் பெயரிடப்படும் வரையில் பாகிஸ்தான் அணியின் தெரிவுக்குழு தலைவராக மிஸ்பா வுல் ஹக் செயற்படவுள்ளார்.