பிரான்ஸில் இரவு நேர ஊரடங்கு சட்டம் அமுல்

கொரோனா தாக்கம்; பிரான்ஸில் இரவு நேர ஊரடங்கு சட்டம் அமுல்

by Staff Writer 15-10-2020 | 10:06 AM
Colombo (News 1st) கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்து செல்வதை தொடர்ந்து பாரிஸ் உள்ளிட்ட மேலும் 8 நகரங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் (Emmanuel Macron) அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கு சட்டம் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என பிரெஞ்ச் அரசு தெரிவித்துள்ளது. இந்த ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் சனிக்கிழமை முதல் 4 வாரங்களுக்கு அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர பிரான்ஸில் சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, வைரஸ் பரவும் வகையில் மக்கள் ஒன்றுகூடும் ஹோட்டல்கள், உணவகங்களை உரிய காலத்திற்கு முன்னர் மூடுமாறு ஜெர்மன் அரசு அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தின் பின்னர், நாட்டில் நாளொன்றில் 5,000 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து ஜெர்மன் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இதேவேளை, நெதர்லாந்தை ஒரு மாதத்திற்கு பகுதியளவில் முடக்குவதற்கு அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.