அநுராதபுரத்தில் நெல் களஞ்சியசாலையில் இருந்து 5 இலட்சம் கிலோகிராம் நெல் கைப்பற்றப்பட்டுள்ளது

அநுராதபுரத்தில் நெல் களஞ்சியசாலையில் இருந்து 5 இலட்சம் கிலோகிராம் நெல் கைப்பற்றப்பட்டுள்ளது

அநுராதபுரத்தில் நெல் களஞ்சியசாலையில் இருந்து 5 இலட்சம் கிலோகிராம் நெல் கைப்பற்றப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2020 | 4:37 pm

Colombo (News 1st) அநுராதபுரம் – மஹவிலச்சிய பகுதியில் நெல் களஞ்சியசாலையொன்றை நுகர்வோர் விவகார அதிகார சபையினர் இன்று சுற்றிவளைத்தனர்.

குறித்த நெல் களஞ்சியத்தில் இருந்து 5 இலட்சம் கிலோகிராம் நெல் கைப்பற்றப்பட்டதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளும் அதிகார சபையின் அநுராதபுரத்திலுள்ள அலுவலக அதிகாரிகளும் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இடைத்தரகர்கள் குறைந்த விலையில் நெல்லை கொள்வனவு செய்து சந்தையில் விநியோகிக்காமல், களஞ்சியப்படுத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

2003 – 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார சட்டத்தின் 17 – 1 சரத்திற்கமைய, வர்த்தகர் ஒருவரினால் எந்தப் பொருளையும் சராசரி வணிகத் தேவையைக் காட்டிலும் அவரின் விற்பனை நிலையம் அல்லது வேறு விற்பனை நிலையங்களில் களஞ்சியப்படுத்தி வைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்