by Staff Writer 14-10-2020 | 7:37 PM
Colombo (News 1st) ‘செய்கடமை’ COVID-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு 1659 மில்லியனாக அதிகரித்துள்ளது.
பிரதமர் அலுவலகத்தினால் 82,906.97 ரூபாவும் தனிப்பட்ட அன்பளிப்பாக 6000 ரூபாவும், கம்பஹா மாவட்ட சமுர்த்தி அதிகாரிகளின் நலன்புரி சங்கத்தினால் ஒரு இலட்சம் ரூபாவும் இலங்கை வங்கியின் ஓய்வூதிய சங்கத்தினால் 25 இலட்சம் ரூபாவும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.
இந்த அன்பளிப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.