ஹைதராபாத் அணியை வென்றது சென்னை சுப்பர் கிங்ஸ் அணி

ஹைதராபாத் அணியை வென்றது சென்னை சுப்பர் கிங்ஸ் அணி

ஹைதராபாத் அணியை வென்றது சென்னை சுப்பர் கிங்ஸ் அணி

எழுத்தாளர் Staff Writer

14 Oct, 2020 | 9:31 am

Colombo (News 1st) IPL கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

13 ஆவது IPL கிரிக்கெட் தொடரில் 29 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

சென்னை அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 167 ஓட்டங்களை எடுத்தது.

சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக வொட்சன் 42 ஓட்டங்களையும் அம்பத்தி ராயுடு 41 ஓட்டங்களையும் எடுத்தனர்.

ஹைதராபாத் அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து தோல்வியை தழுவியது.

சென்னை அணியின் சார்பில் கர்ண் சர்மா மற்றும் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்திலுள்ளதுடன், டெல்லி கெப்பிட்டல்ஸ் 2 ஆம் இடத்திலும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு 3 ஆம் இடத்திலும் உள்ளன.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 6 புள்ளிகளுடன் 6 ஆம் இடத்திலுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்