மட்டக்களப்பு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்

மட்டக்களப்பு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்

மட்டக்களப்பு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

14 Oct, 2020 | 7:05 pm

Colombo (News 1st) களுத்துறை, கண்டி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்ட செயலாளராக பிரசன்ன கினிகே நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்ட செயலாளராக கடமையாற்றிய U.D.C. ஜயலால் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்டி மாவட்ட செயலாளராக ஷந்தன தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திஸ்ஸ கருணாரத்ன ஓய்வு பெற்றுள்ளதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட செயலாளராக ஏ.கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சேவை நிமித்தம் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய மாவட்ட செயலாளர்கள் இன்று மாலை அமைச்சரவை அலுவலகத்தில் நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்