போலந்தில் இரண்டாம் உலகப் போர் காலத்து வெடிகுண்டு நீருக்கடியில் வெடித்துச் சிதறியது
by Bella Dalima 14-10-2020 | 4:16 PM
Colombo (News 1st) போலந்தில் நீருக்கடியில் கண்டறியப்பட்ட இரண்டாம் உலகப் போர் காலத்து வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய முயன்றபோது அது எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியுள்ளது.
ஜெர்மனியுடன் போலந்தின் எல்லையில் உள்ள ஓடர் நதியுடன் பால்டிக் கடலை பியாஸ்ட் கால்வாய் இணைக்கிறது. இந்நிலையில், 1945ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டனின் ராயல் விமானப்படை பயன்படுத்திய டால்பாய் வெடிகுண்டு பியாஸ்ட் கால்வாயில் கண்டறியப்பட்டது.
5400 கிலோ எடையுள்ள இந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பொருட்டு அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் கடலோரப் பாதுகாப்புப் படையின் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையின் போது, எதிர்பாராத விதமாக வெடிகுண்டு நீருக்கடியில் வெடித்தது. எனினும், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.