by Chandrasekaram Chandravadani 14-10-2020 | 8:39 AM
Colombo (News 1st) தமது பாராளுமன்றத்தின் மீது நடாத்தப்பட்ட சைபர் தாக்குதல்களுக்கு ரஷ்யா பொறுப்பு கூற வேண்டும் என நோர்வே அரசு தெரிவித்துள்ளது.
நோர்வே பாராளுமன்றத்தின் மின்னஞ்சல் கட்டமைப்பின் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டது.
நாட்டின் முக்கிய ஜனநாயக பீடத்தின் மீது நடாத்தப்பட்ட இத்தகைய தாக்குதலானது மிகவும் ஆபத்தானது என நோர்வே வௌிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா உள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் நோர்வே வௌிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ரஷ்யா இந்த குற்றச்சாட்டினை மறுத்துள்ளது.