பழைய போகம்பறை சிறையில் அமைதியின்மை; 11 கைதிகள் தடுத்துவைப்பு

பழைய போகம்பறை சிறையில் அமைதியின்மை; 11 கைதிகள் தடுத்துவைப்பு

பழைய போகம்பறை சிறையில் அமைதியின்மை; 11 கைதிகள் தடுத்துவைப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Oct, 2020 | 1:57 pm

Colombo (News 1st) பழைய போகம்பறை சிறைச்சாலையில் அமைதியின்மையுடன் செயற்பட்ட 11 கைதிகள் பலத்த பாதுகாப்புடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கைதிகளை மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகளில் குறித்த 11 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் பழைய போகம்பறை சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு நிலையங்களில் இருந்து தப்பிச் செல்வதற்கு முயற்சித்துள்ளனர்.

தமது உணவுப் பாத்திரத்தை கூரிய ஆயுதமாக மாற்றியுள்ளதுடன் சிறைச்சாலை உத்தியோகத்தரை அச்சுறுத்தி அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.

இதன்போது சிறைச்சாலை உத்தியோகத்தர், மற்றுமொரு உத்தியோகத்தரின் உதவியுடன் கைதிகளின் முயற்சியை முறியடித்துள்ளனர்.

கைதிகளுடன் ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை பாதுகாவலர் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்