நாட்டில் மேலும் 194 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 194 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 194 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Staff Writer

14 Oct, 2020 | 7:13 am

Colombo (News 1st) நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தை கடந்துள்ளது.

நேற்றைய தினம் (13) மேலும் 194 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 80 பேர் பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட மேலும் 114 பேர் மினுவாங்கொடை கொரோனா கொத்தணியை சேர்ந்தவர்களும் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களும் ஆவர்.

இதனடிப்படையில், மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,591 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,038 ஆக அதிகரித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்