by Chandrasekaram Chandravadani 14-10-2020 | 1:00 PM
Colombo (News 1st) தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய கட்டுப்பாட்டு காஷ்மீர் பிராந்தியத்தின் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி (Mehbooba Mufti) விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு இந்திய அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த வருடம் ஆகஸ்ட் 5 ஆம் திகதி இரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் ஆகஸ்ட் 5ஆம் திகதி முதல் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அவருடன் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பலர் சிறை வைக்கப்பட்டனர்.
இவர்களில் பெரும்பாலான தலைவர்கள் ஒரு வருடத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.