அத்தியாவசியப் பொருட்களுக்கு இறக்குமதி வரி நீக்கம்

சில அத்தியாவசியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரி நீக்கம்

by Staff Writer 13-10-2020 | 7:27 PM
Colombo (News 1st) தற்போதைய வாழ்க்கைச் செலவு மற்றும் COVID-19 நிலைமையை கருத்திற்கொண்டு டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது. வரி நீக்கத்தை தொடர்ந்து இன்றிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், டின் மீனின் விலை 200 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 100 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் சீனியின் விலை 85 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. சதொச-வில் 500 ரூபாவிற்கு அதிக பெறுமதியுடைய அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்தால் ஒரு கிலோகிராம் பருப்பை 150 ரூபாவிற்கு கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை, குருநாகல் பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் என்பவற்றினால் கொழும்பு நகருக்கான தேங்காய் விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நுகர்வோர் சதொச-வில் நியாயமான விலையில் தேங்காயை கொள்வனவு செய்ய முடியும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.