மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கிய ட்ரம்ப்

மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கிய ட்ரம்ப்

by Staff Writer 13-10-2020 | 8:59 AM
Colombo (News 1st) கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ரே்தல் பிரசார நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளார். புளோரிடா மாநிலத்தில் தேர்தல் பிரசாரங்களில் ட்ரம்ப் ஈடுபட்டுள்ளார். எதிர்வரும் 4 நாட்களுள் மேலும் 4 மாநிலங்களில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுபதற்கு அவர் எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமாயின், புளோரிடா மாநிலத்தில் வெற்றி பெற வேண்டும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி ட்ரம்ப்பின் எதிர்தரப்பு வேட்பாளர் ஜோ பைடன், ஒஹாயோ மாநிலத்தில் தமது பொருளாதார திட்டங்களை முன்வைத்துள்ளார்.