மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட கிராமங்களில் தொற்று நீக்கம்

மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட கிராமங்களில் தொற்று நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

13 Oct, 2020 | 5:46 pm

Colombo (News 1st) மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்டு, விடுவிக்கப்பட்ட இரண்டு கிராமங்களிலும் படையினர் இன்று தொற்று நீக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

COVID தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மன்னார் – பட்டித்தோட்டம் , பெரியகடை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.

24 மணித்தியால தனிமைப்படுத்தலின் பின்னர் நேற்று (12) மாலை 6 மணியளவில் இரண்டு கிராமங்களும் மீண்டும் திறக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று அந்த கிராமங்கள் வழமைக்குத் திரும்பியதுடன், அங்கு தொற்று நீக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்