பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி 

பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி 

பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி 

எழுத்தாளர் Staff Writer

13 Oct, 2020 | 9:59 am

Colombo (News 1st) பாகிஸ்தான் – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் பாகிஸ்தானிலிருந்து 6000 மெட்ரிக் தொன் பாஸ்மதி அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது.

கடந்த காலங்களில், அரிசி இறக்குமதி செய்வதற்கு தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த வகையை தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளை இறக்குமதி செய்து, குறித்த நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன.

இந்த விடயங்களை கருத்திற் கொண்டு அரசாங்கத்தின் கீழுள்ள பல்வேறு கூட்டுத்தாபனங்கள், கூட்டுறவு பொது வர்த்தக கூட்டுத்தாபனம், லங்கொ சதோச ஆகியவற்றினூடாக அரிசியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்