அம்பாறையில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது

திருக்கோவில் பகுதியில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது

by Staff Writer 13-10-2020 | 1:09 PM
Colombo (News 1st) அம்பாறை - திருக்கோவில் பகுதியில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த மோட்டார்சைக்கிளை பரிசோதனைக்குட்படுத்திய போது, இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றும் வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரைபல் துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொத்துவில் மற்றும் அட்டாளைச்சேனை பகுதிகளைச் சேர்ந்த இருவரே கைது இவ்வாறு செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.