டவர் மண்டப நாடக மற்றும் அரங்கியல் கல்லூரி மாணவர்களுக்கான புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்

டவர் மண்டப நாடக மற்றும் அரங்கியல் கல்லூரி மாணவர்களுக்கான புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்

டவர் மண்டப நாடக மற்றும் அரங்கியல் கல்லூரி மாணவர்களுக்கான புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

13 Oct, 2020 | 5:24 pm

Colombo (News 1st) டவர் மண்டப நாடக மற்றும் அரங்கியல் கல்லூரி மாணவர்களுக்கான மாதாந்த புலமைப்பரிசில் தொகையை 3000 ரூபாவாக அதிகரிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், டவர் மண்டப நாடக மற்றும் அரங்கியல் கல்லூரியில் திறமையை வௌிப்படுத்தும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத் தொகையையும் 10,000 ரூபாவாக அதிகரிக்குமாறும் பிரதமர் அறிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில், அலரி மாளிகையில் நடைபெற்ற டவர் மண்டப அரங்க அறக்கட்டளையின் 296 ஆவது நிர்வாகக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கலாபுரவில் இதுவரை அபிவிருத்தி செய்யப்படாத அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தில் கலைஞர்களுக்கான வீட்டுத்திட்டமொன்றை நிர்மாணிக்க முடியும் என இதன்போது பிரதமரின் செயலாளர் காமினி செனரத் சுட்டிக்காட்டியதையடுத்து, அதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம், நுவரெலியா, மொனராகலை மற்றும் யாழ்ப்பாணத்தில் கலைஞர்களுக்காக ஒதுக்கப்பட்ட விடுமுறை ஓய்வு விடுதி​யொன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டம் தொடர்பான நடவடிக்கைகளை ஆராயுமாறும் பிரதமர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

நாடக மற்றும் அரங்கியல் கல்லூரியில் திறமைகளை வௌிப்படுத்தும் மாணவர்களுக்கு வௌிநாட்டு புலமைப்பரிசில்களை வழங்குவது​ தொடர்பில் கவனம் செலுத்தவும் இந்த கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கலைஞர்களுக்கு விபத்துக் காப்புறுதி வழங்கப்படும் போது மேடை நாடக கலைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கி, முதற்கட்டமாக நிதியைப் பெற்றுக்கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்