கொள்ளுப்பிட்டியிலுள்ள Brandix தலைமையகத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று

கொள்ளுப்பிட்டியிலுள்ள Brandix தலைமையகத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Staff Writer

13 Oct, 2020 | 6:35 pm

Colombo (News 1st) கொள்ளுப்பிட்டியிலுள்ள Brandix தலைமை அலுவலகத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்திலுள்ள 147 பேர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவர்களில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக கொழும்பு பிரதம சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

இவர்கள் சில தினங்களுக்கு முன்னர் மினுவாங்கொடை தொழிற்சாலைக்கு சென்றிருந்தமை தெரியவந்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட அனைத்து நோயாளர்களும் கொழும்பிற்கு அப்பாலுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

பொரளையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் சென்றிருந்ததாகக் கூறப்படும் சில வர்த்தக நிலையங்கள் இன்று முற்பகல் மூடப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்