உயர்தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்தவர் திருகோணமலையில் கைது

உயர்தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்தவர் திருகோணமலையில் கைது

உயர்தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்தவர் திருகோணமலையில் கைது

எழுத்தாளர் Staff Writer

13 Oct, 2020 | 4:48 pm

Colombo (News 1st) ஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய ஒருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனையூர் மத்திய கல்லூரியில் வெளிவாரியாக பரீட்சை எழுத வருகை தந்த ஒருவரை ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சம்பூர் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

வெருகல் – மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை நாளை ​(14) மூதூர் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்