'சிந்தனை சுதந்திரத்திற்கு 20 இடையூறானது'

20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டாம் - இலங்கை அமரபுர ராமஞ்ஞ சாமக்ரி சங்க சபை 

by Staff Writer 12-10-2020 | 3:30 PM
Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மனிதனின் சிந்தனை சுதந்திரம் மற்றும் செயற்பாட்டிற்கு பாரிய இடையூறுகளை ஏற்படுத்தும் என இலங்கை அமரபுர ராமஞ்ஞ சாமக்ரி சங்க சபை, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இது வளர்ச்சி அடையாத சமூகத்தை நோக்கி பயணிக்கும் சட்ட ஏற்பாடு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதனை நிறைவேற்ற வேண்டாம் என இலங்கை அமரபுர ராமஞ்ஞ சாமக்ரி சங்க சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. நிறைவேற்றதிகாரம், பாராளுமன்றம் மற்றும் நீதித்துறை என்பன சமநிலையில் பேணப்பட வேண்டும் என்பதே உலகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடாகும் என இலங்கை அமரபுர ராமஞ்ஞ சாமக்ரி சங்க சபை சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டின் எதிர்கால பயணத்தில் காணப்படும் தடைகளை நீக்குவதற்காக 19 ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளதாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் நாட்டின் நலன் மற்றும் மக்களின் இறைமை ஆகியவற்றை பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்