ரவி கருணாநாயக்க, அர்ஜூன் அலோசியஸை மன்றில் ஆஜராகுமாறு அறிவிப்பு 

ரவி கருணாநாயக்க, அர்ஜூன் அலோசியஸை மன்றில் ஆஜராகுமாறு அறிவிப்பு 

ரவி கருணாநாயக்க, அர்ஜூன் அலோசியஸை மன்றில் ஆஜராகுமாறு அறிவிப்பு 

எழுத்தாளர் Staff Writer

12 Oct, 2020 | 4:37 pm

Colombo (News 1st) முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோரை எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்திய பட்டபெதிகே இன்று (12) உத்தரவிட்டுள்ளார்.

நிதி அமைச்சராக செயற்பட்ட போது, 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதிக்கும் 2016 ஆம் ஆண்டு செப்டெம்பெர் 30 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வோல் அன்ட் ரோ அசோசியேட்ஸ் நிறுவனம் மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம் ஆகியவற்றின் காசோலைகளை பயன்படுத்தி கொள்ளுப்பிட்டியில் உள்ள அதிசொகுசு தொடர்மாடி குடியிருப்பில் வசித்தமை மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட 06 குற்றச்சாட்டுகளின் கீழ் இலஞ்ச ஊழல் விசாரணை பிரிவினரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட 11.68 மில்லியன் ரூபா பணத்தை செலுத்தி வாடகை அடிப்படையில் குறித்த வீட்டில் வசிப்பதற்கு சென்றமையூடாக இலஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாக பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்