கம்பஹாவிலிருந்து வௌியில் செல்வோருக்கு விசேட பரீட்சை மத்திய நிலையங்கள்

கம்பஹாவிலிருந்து வௌியில் செல்வோருக்கு விசேட பரீட்சை மத்திய நிலையங்கள்

கம்பஹாவிலிருந்து வௌியில் செல்வோருக்கு விசேட பரீட்சை மத்திய நிலையங்கள்

எழுத்தாளர் Fazlullah Mubarak

12 Oct, 2020 | 11:58 am

கம்பஹா மாவட்டத்திலிருந்து வௌி மாவட்டங்களுக்கு பரீட்சைகளுக்கு செல்லும் மாணவர்களுக்கான விசேட பரீட்சை நிலையங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, கனேமுல்ல பகுதியில் வசிக்கும் பரீட்சார்திகளுக்காக புலுகஹகொட ஶ்ரீ விஜய மகா வித்தியாலயத்தில் விசேட பரீட்சை நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது

யக்கல, வீரகுல மற்றும் கம்பஹா பகுதிகளை சேர்ந்த பரீட்சார்த்திகள் மிரிஸ்வத்த கெப்பெடிபொல மகா வித்தியாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்திற்கு செல்ல முடியும்.

கிரிந்திவெல பகுதியிலுள்ள பரீட்சார்த்திகளுக்காக கிரிந்திவெல மகா வித்தியாலயத்தில் விசேட பரீட்சை நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

வெலிவேரிய மற்றும் மல்வத்துஹிரிபிட்டி பகுதிகளை சேர்ந்த பரீட்சார்த்திகள் வெலிவேரிய மத்துமபண்டார மகாவித்தியாலயத்திற்கு செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொம்பே மற்றும் பூகொட பகுதியிலுள்ள பரீட்சார்த்திகளுக்கு தொம்பே சியனே தேசிய பாடசாலையில் விசேட பரீட்சை நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

நிட்டம்புவ மற்றும் வேயங்கொட பகுதிகளில் வசிக்கும் உயர்தர பரீட்சார்திகள் நிட்டம்புவ பௌத்த வித்தியாலயத்திற்கு சென்று பரீட்சைக்கு தோற்ற முடியும்.

மீரிகம மற்றும் பல்லேவல பகுதியிலுள்ள பரீட்சார்த்திகளுக்கு கல்எலிய ஶ்ரீ வித்தியாகீர்த்தி கனிஷ்ட வித்தியாலத்தில் விசேட பரீட்சை நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மினுவங்கொட மாணவர்கள், கொட்டுகொல ராஹுல மகா வித்தியாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்திற்கு சென்று உயர் தர பரீட்சையில் தோற்ற முடியும்.

திவுலபிட்டிய பகுதியை சேர்ந்த பரீட்சார்த்திகளுக்கு துனகஹ ரணசிங்க மகா வித்தியாலயத்திலும் சீதுவ பகுதியை சேர்ந்தவர்களுக்கு முகலன்கமுவ பண்டாரநாயக்க வித்தியாலயத்திலும் பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

ஜா – எல மற்றும் கந்தான பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் தெஹியாகாத ஹொலிரோஷரி வித்தியாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட பரீட்சை நிலையத்திற்கு செல்ல முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்