English
සිංහල
எழுத்தாளர் Fazlullah Mubarak
12 Oct, 2020 | 12:18 pm
மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பொது மக்களுக்கான சேவை இன்று தொடக்கம் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி, வேரஹெர அலுவலகங்கள் மூடப்பட்டிருக்குமென அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளையும் இன்று தொடக்கம் 05 நாட்களுக்கு இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கொழும்பு மாநகர சபையின் பொது மக்கள் சேவை பெறுவதற்கான தினம் மீள் அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்திற்கான தபால் சேவையும் மத்திய தபால் பரிமாற்றகத்தின் நுகர்வோர் சேவை விநியோகமும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊடாக வர்த்தக சேவைகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் தபால் பொதிகளை தபாலில் சேர்ப்பதற்கு, வர்த்தக பிரிவின் உதவி அத்தியட்சகருடன் தொடர்புகொண்டு தமக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியுமென தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
22 May, 2022 | 09:46 PM
22 May, 2022 | 05:46 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS