CID பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு

CID பிரதி பொலிஸ் மா அதிபர், தலைமை விசாரணை அதிகாரிக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அழைப்பு

by Staff Writer 11-10-2020 | 3:59 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் தலைமை விசாரணை அதிகாரி ஆகியோரை சட்ட மா அதிபரிடம் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், இருவரும் நாளை (12) சட்ட மா அதிபர் முன்னிலையில் ஆஜராக வேண்டுமென அவர் கூறியுள்ளார். இதன்போது, சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து விசாரணை அறிக்கைகளையும் சட்ட மா அதிபர் முன்னிலையில் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விசாரணைகளின் போது வழங்கப்பட்ட சாட்சியங்களை மீளாய்வுக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவை சட்ட மா அதிபரால் ஆராயப்பட்ட பின்னர், ரியாஜ் பதியுதீன் என்பவர் எதனடிப்படையில் விடுவிக்கப்பட்டார் என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்