நோயாளர்களை பார்வையிட செல்வோருக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவுறுத்தல் 

நோயாளர்களை பார்வையிட செல்வோருக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவுறுத்தல் 

நோயாளர்களை பார்வையிட செல்வோருக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவுறுத்தல் 

எழுத்தாளர் Staff Writer

11 Oct, 2020 | 3:11 pm

Colombo (News 1st) அநாவசியமாக நோயாளிகளை பார்வையிடுவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோயாளிகளை பார்வையிட செல்வோர், தமது உடல்நிலை தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது கட்டாயமென சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியம் காணப்பட்டால் மாத்திரம் வைத்தியசாலைகளுக்கு செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்று நாட்டில் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்களில் வௌிநாடுகளிலிருந்து வருகை தந்த இருவர் அடங்குகின்றனர்.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 4,628 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 3,306 பேர் குணமடைந்துள்ள நிலையில் 1,309 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்