இலங்கைக்கு சீனா நிதியுதவி

இலங்கைக்கு சீனா நிதியுதவி

இலங்கைக்கு சீனா நிதியுதவி

எழுத்தாளர் Staff Writer

11 Oct, 2020 | 6:45 pm

Colombo (News 1st) இலங்கைக்கு சீனா 600 மில்லியன் யுவான் நிதி உதவியை வழங்கியுள்ளது.

இலங்கை – சீனா இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையில் அண்மையில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.

யெங் ஜியெச்சி தலைமையிலான சீன இராஜதந்திர குழுவின் இலங்கை விஜயத்திற்கு இணையாக கைச்சாத்திடப்பட்ட இந்த உடன்படிக்கைக்கு அமையவே சீனா 600 மில்லியன் யுவானை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இத்தகைய அத்தியவசிய தருணத்தில் நிதி உதவி வழங்கியமை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சீனாவிற்கு நன்றி தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்