நீதிமன்ற தீர்ப்பு பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும்

20 ஆவது திருத்தம்: உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் - சபாநாயகர்

by Staff Writer 10-10-2020 | 3:54 PM
Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தமக்குக் கிடைத்துள்ளதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கூறியுள்ளார். 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 05 ஆம் திகதி நிறைவடைந்தது. பிரதம நீதியரசர் ஜயந்த தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், அவற்றில் இரு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனையின் தீர்ப்பு சபாநாயகர் மற்றும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் கடந்த 05 ஆம் திகதி அறிவித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஏனைய செய்திகள்